கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பாக குழுவை அமைத்து அரசு ஆலோசனை மேற்கொண்டது.

இதனைத் தொடர்ந்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பை எடை 1.5 முதல் 2 கிலோ வரை இருக்க வேண்டும் என்றும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை இரண்டு முதல் மூன்று கிலோ வரையும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தை மூன்று கிலோ முதல் 4 கிலோ வரையும், 9 , 10 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தை நான்கு கிலோ முதல் ஐந்து கிலோ வரையும் இருக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளும் இந்த அறிவிப்பை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.