இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க மக்கள் தோல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது பாஸ்ட் டேக் மூலமாக தோல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு பயணிகள் அதிக காத்திருப்பு நேரத்தை கொண்டிருந்ததால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனால் பயணிகள் காத்திருப்பு நேரம் 47 வினாடிகள் ஆக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல திட்டங்கள் குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்தது.

அதன்படி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டோல் கட்டணங்களை வசூலிப்பதற்கு புதிய முறைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். அதாவது தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தோல் கட்டண முறையை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அமல்படுத்துவதன் மூலமாக டோல் கட்டணத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கலாம் என கூறப்படுகிறது.