இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக மக்கள் எல்பிஜி சிலிண்டர் எரிவாயு 603 ரூபாய்க்கு பெற்று வருகிறார்கள். அதாவது 903 ரூபாய் செலுத்தி சிலிண்டரைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு 300 ரூபாய் மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பல மாநிலங்களிலும் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எம்பி ஜாவித் அலிகான் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த நிலையில் 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்குவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் இதற்கான எந்த அறிவிப்பும் இந்திய அரசால் வெளியிடப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.