இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக எடையை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி புத்தகப் பையின் எடையால் 22 சதவீதம் மாணவ மாணவிகள் தசை, முழங்கால், முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

புத்தகங்கள் மற்றும் படிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது மந்தமாக இருப்பதாகவும் சரியாக தூங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மாணவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் புத்தக எடையை குறைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.