நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிந்தைய கணக்கெடுப்பு அறிக்கையின்படி 9 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 61% பேர் சமூக ஊடகங்கள், ஓடிடி மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். ஆன்லைன் அடிமைத்தனம் காரணமாக இந்த குழந்தைகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் அல்லது பெரும்பாலான நேரங்களில் மனசோர்வடைந்தவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.

லோக்கல் சர்க்கில் என்ற இணையதளம் சமீபத்தில் நாட்டில் உள்ள 269 மாவட்டங்களில் வசிக்கும் 46,000 பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் சராசரியாக ஒன்பது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 61% பேர் பல்வேறு ஆன்லைன் தளங்களில் தினமும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.