கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை  தொடங்கி வைத்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் கொள்முதல் விலைக்கு டெண்டர் எடுக்க வர முற்படாததால், இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால், லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தாகுமா என்று மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், நிதிநிலைமை சீரான பிறகு, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார். மேலும் மாணவர்கள் உங்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்றார்