புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.  தமிழகத்தை சேர்ந்த 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

ஜடேறி நாமக்கட்டி, வீரமாங்குடி செட்டிபுட்டா சேலை மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறியமுடிகிறது. ஏற்கனவே மதுரை மல்லி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 56 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது