
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பரியாரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன்(51)- மினி நம்பியார்(42) தம்பதியினர். ராதாகிருஷ்ணன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க சென்றபோது மர்ம நபர்கள் ராதாகிருஷ்ணனை கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்த்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சிஜூ ஜோசப் ஆகிய இருவரும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை கொலை செய்தது போலீசார் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் சந்தோஷ், ஜோசப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினி நம்பியாரும், சந்தோஷும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி பழைய மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். அதில் கலந்து கொண்ட மினி நம்பியாருக்கும் சந்தோஷிற்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த இராதாகிருஷ்ணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் மினி நம்பியார் அதை கேட்கவில்லை. தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தியதால் மினி நம்பியார் சந்தோஷுடன் இணைந்து ராதாகிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்பிறகு சந்தோஷ் தனது நண்பர் சிஜோவுடன் இணைந்து ராதாகிருஷ்ணனை சுட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மினி நம்பியாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.