
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூலை 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் மாணவ மாணவிகளுக்கான கட்டணம் இல்லா புதிய பஸ் பயண அட்டையை வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ்பாஸ், பள்ளி மாணவ மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைப் போலவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ மாணவ மாணவிகள் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை அல்லது தங்களுடைய கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.