இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே குழந்தை இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் செய்யும் சிறிய சிறிய செயல்கள் கூட வீட்டில் இருப்பவர்களுக்கு மனதில் ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று பள்ளியில் அமர்ந்தவாறு அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. சிறிது வினாடிகள் தூங்கிய குழந்தை ஒரு கட்டத்தில் கீழே விழுந்து விடுகிறது. பின்பு பதறியவாறு விழித்துப் பார்க்க அனைவரும் குழந்தையை பார்ப்பதை பார்த்து ஒரு நிமிடம் வெட்கப்பட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வெட்கமும் புன்னகையும்
கோடி பெறும் 😍🤗🌹 pic.twitter.com/eQ64iIZOz9— ஆதிரன் 🇮🇳 ⚫🔴 (@Aathiraj8586) July 4, 2024
