திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் கிராமத்தில் வன்னியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலிங்கம் என்ற மகன் இருந்துள்ளார். முத்துலிங்கம் அவரது நண்பர்களான ராமன், ஜெகதீஷ் ஆகியோர் வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் முத்துலிங்கம் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தளவாய்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஆவூர் முருகர் கோவில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த அரச மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராமன், ஜெகதீஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.