மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகள் காலையில் 7:00 மணி முதல் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒரு சில பள்ளிகள் வகுப்புகளுக்கு சரியாக குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்பதால் அவர்களை அதிகாலைக்கு முன்பு கிளப்பி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளின் தூக்கம் பெரிதும் பாதிக்கப்படுவதால் குழந்தைகள் மீது அக்கறை கொண்டு கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்து வரும் கல்வியாண்டு முதல் இரண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கும் நேரம் 7 மணியிலிருந்து 9 மணி ஆக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.