இந்தியாவில் 21 பேர் புதிய வகை கொரோனா ஜே என் 1ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் 19 பேருக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தல ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டாவியா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் புதிய வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில அளவிலான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். கொரோனா முடிவுக்கு வராத நிலையில் அதிகரிக்கும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் குறித்தும் அதன் தீவிரம் பற்றியும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் முக்கியம். எனவே மாநில அரசு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.