2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டு துறை அமைச்சகம். கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது சாமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, முகமது  ஹு சாமுதீன் (குத்துச்சண்டை) ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி ஆவார். கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு அவரது சகோதரிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழக செஸ் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர்பி ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க அறிவிக்கப்பட்டது. மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சியாளர் கணேஷ் பிரபாகரன் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் ஸ்ரீ சங்கர், பருல் சதுர்வேதி, வில் வித்தையில் ஓஜாஸ் பிரவீன், அதிதி கோபி சந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.