தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும், கொரோனா பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது, இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தேர்வை சிறப்பாக எழுதி முடித்துள்ளனர்.

6-12ம் வகுப்புக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023-24ம் கல்வி ஆண்டில் 216 நாட்கள் பள்ளி வேலைநாட்களாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, கோடை விடுமுறை, பொதுவிடுமுறை என மொத்தம் 150 நாட்கள் விடுப்பு நாட்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் மே 1 முதல் 31 வரை கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.