அமெரிக்காவின் ஹோண்டுராசில் பகுதியில் இருந்து 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து டெகுசிகல்பாவிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருபதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.