பலாத்கார வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை விவரம் நேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டது.