
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி அருகே அரசு பேருந்தில் ஓடி சென்று ஏறி தேர்வு எழுதிய மாணவி சுஹாசினி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த மாணவியை ஏற்றாமல் அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கி சென்றுள்ளார்.
இதனால் அந்த மாணவி பேருந்தின் பின்னாடியே ஓடி சென்ற காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. அதன் பிறகு உயர் அதிகாரிகள் அரசு பேருந்து ஓட்டுனரை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.