17-வது ஆசியக் கோப்பை (Asia Cup) கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தலா ஒரு முறை மோதுகின்றன. இதில் முதன்மை 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், சூப்பர்-4 சுற்றின் 2வது ஆட்டம் நேற்று (செப்.21) இரவு துபாயில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதில் சகிப்சதா பர்ஹான் 58 ரன்களுடன் சிறப்பாக விளையாடினார். இந்திய பந்து வீச்சில் ஷிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 172 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அபிஷேக் சர்மா 74 ரன்கள், சுப்மன் கில் 47 ரன்கள் என தாக்குபடையாக விளையாடினார்கள். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் பெற்றார். அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Things got heated between Abhishek Sharma & Haris Rauf 👀🤬
Watch #INDvPAK LIVE NOW, on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/Wt9n0hrtl7
— Sony Sports Network (@SonySportsNetwk) September 21, 2025
இந்த ஆட்டத்தின் போது ஒரு சிறிய பதற்றமும் ஏற்பட்டது. இந்திய அணி பேட்டிங் செய்தபோது, 5வது ஓவரை வீசிய ஹாரிஸ் ரவூப்பின் மூன்றாவது பந்தை அபிஷேக் சர்மா ரன் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ரவூப் அவரிடம் சில வார்த்தைகள் கூறினார். இதற்கு பதிலடியாக அபிஷேக் சர்மாவும் அவருக்கு எதிராக பேசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தை சுப்மன் கில் பவுண்டரியாக அடித்ததும், ஹாரிஸ் ரவூப் மீண்டும் ஏதோ சொல்ல, அபிஷேக் சர்மா மீண்டும் கடுப்படைந்து நேரடியாக எதிர்வினை தெரிவித்தார். இருவரும் சில நிமிடங்கள் வாய்வழி மோதலில் ஈடுபட்டனர். பின்னர் நடுவர் நிலைநாட்டி இருவரையும் சமாதானம் செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
