சென்னை மாவட்டம் மாதவரத்தில் இருந்து அண்ணா நகர் நோக்கி மண் லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்றது. அதே நேரத்தில் சரவணன் என்பவர் தனது மனைவி பிரியா குழந்தை கரோலின் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மேம்பாலத்தில் ஏற முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரியா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரவணன் மற்றும் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.