கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் தனியார் பேருந்து மோதி ஆட்டோவில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதற்கு பின்னே ஒரு ஆட்டோ சென்றது. அந்த சமயம் வேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது.

இதனால் இரண்டு பேருந்துகளுக்கும் நடுவில் சிக்கி ஆட்டோவில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த ஆட்டோவும் சுக்கு நூறாக நொறுங்கியது. இதனை பார்த்த மக்கள் அலரி சத்தம் போட்டனர்.

தற்போது படுகாயம் அடைந்த நான்கு பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.