
ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் நலனை கருதி பயிர் காப்பீடு செய்ய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மகசூல் இழப்பு, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலர் அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.