மின்னஞ்சல் (இ-மெயில்) சேவையை இன்று உலகில் பயன்படுத்தாதவர்கள்  இல்லை என்றே சொல்லலாம். பல்வேறு நிறுவனங்கள் இ-மெயில் சேவையை வழங்கி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் சேவை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பயன்பாடு பெற்ற முதல் இடத்தை வகிக்கிறது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 180 கோடி ஜிமெயில் பயனர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைய பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், ஜிமெயில் சேவையில் அவ்வப்போது புதுப்பிப்புகளை (updates) கூகுள் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது “Manage Subscriptions” எனும் புதிய டூலை ஜிமெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், நமது இன்பாக்ஸில் தேவையில்லாமல் குவியும் நியூஸ் லெட்டர்கள், விளம்பர மெயில்கள், வணிக தொடர்பான சப்ஸ்கிரிப்ஷன்கள் ஆகியவற்றை ஒருசேர வகைப்படுத்தி நிர்வகிக்கலாம்.

இந்த புதிய வசதி மூலம், பயனர்கள் தாங்கள் ஏற்கனவே சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சேவைகளை அடையாளம் கண்டு அவற்றை நிர்வகிக்க முடியும். தேவையில்லாத மெயில்களை தானாகவே பரிந்துரைத்த வகையில் நீக்கவோ அல்லது அஞ்சல் வரவை நிறுத்தவோ இந்த டூல் உதவுகிறது.

இதனால், இன்பாக்ஸ் சுத்தமாகவும் தேவையான தகவல்களுக்கே இடமளிக்கும்படியும் அமைக்கும் என ஜிமெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மேனேஜ் சப்ஸ்கிரிப்ஷன் வசதி, பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.