இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது கடந்த 2020-ம் ஆண்டு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் விமான கட்டணங்களுக்கான உச்சவரம்பு ஒன்றினை வெளியிட்டது. இந்த உச்சவரம்பு சூழல்களுக்கு ஏற்ப மாற்றும் அடையும் நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அது ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு விமான கட்டணங்கள் படிப்படியாக உயர தொடங்கியது.

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு விமான கட்டணங்கள் உயர்ந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு விமான கட்டணங்கள் அதிகரித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்னை-கோவா பயணத்திற்கு விமான கட்டணம் ரூ. 4,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை கட்டணம் 4,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் சென்னை- துபாய் கட்டணம் 16,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.