மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-வது வருடமாக இப்போது, புது மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. ஆனால் அடிக்கல் நாட்டி 4 வருடங்கள் ஆகியும் எய்ம்ஸ் கட்டிடம் மட்டும் காணவில்லை. முன்பே இந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற மாணவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இரவல் பெற்று 5வது மாடியில் ஒதுக்கப்பட்ட வகுப்பறையில் கல்வி பயின்று வருகின்றனர்.

மிகப் பெரிய செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் ஆய்வகம், வகுப்பறைகள், நூலக வசதிகள் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் சென்ற வருடம் சேர்ந்த 50 மாணவர்களுடன், புதியதாக சேர்ந்த மாணவர்கள் சேர்த்து 100 எம்பிபிஎஸ் மாணவர்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற கோட்டில் தான் அக்கல்லூரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.