ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப்-3ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத்துறை போன்ற பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இத்தேர்வை சுமார் 1 லட்சம் பேர் எழுதி உள்ளனர்.

இதில் 45,223 ஆண்களும், 53,582 பெண்களும் மற்றும் 3ஆம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 98,807 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருப்பினும் மிக அதிக அளவில் தேர்வர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டுள்ளனர். அதாவது, 15 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் பேர் வரை போட்டி போட்டு இந்த தேர்வை எழுதி உள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 3500-க்கும் அதிகமானோர் போட்டி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.