தெலங்கானாவிலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, நேற்று இரவு ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பயணிக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணித்த நிலையில், தீவிபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

 

தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.