மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்குள்ள நைஜர் மாகாணத்தில் அகெயி நகர் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மற்றொரு லாரி  வேகமாக வந்து கொண்டிருந்தது.

அந்த லாரி எதிர்பாராத விதமாக எரிபொருள் ஏற்றி சென்ற லாரியின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 48 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.