அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஸ்டீவன் ஆண்டர்சன் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது. இருப்பினும் மீண்டும் அந்த கார் பின் நோக்கி சென்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனையடுத்து காரிலிருந்து இறங்கிய திருநங்கை ஒருவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அந்த நபரை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது x பக்கத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்தது ஒரு திருநங்கை என்பது தெரிய வந்தது. அவருடைய பெயர் காரோன் பிஷ்ஷர் (20). அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் வீடியோவை பார்த்துவிட்டு இது மிகவும் பயங்கரமானது என்று கூறியுள்ளார்.