மும்பை மேம்பாலத் தூண் சரிந்து விழுந்த விபத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கர் பகுதியில் மிக உயரமான மின்விளக்கு கோபுரம் திடீரென ஒரு காரின் மீது சரிந்து விழுந்ததில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் அவருடன் பயணம் செய்த மற்றவர்களும் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பராமரிப்பு குறைபாடு காரணமாகவே இந்த மின்விளக்கு கோபுரம் சரிந்ததாகக் கூறியுள்ளார்.

“>

இந்நிலையில் உயிரிழந்த தலைவரின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற உள்கட்டமைப்பு சார்ந்த விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.