இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு என்றாலே பலரும் நாடுவது சமூக வலைதளங்களைத்தான். இதில் பகிரப்படும் வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் நொடிப் பொழுதில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு இளம்பெண் பந்தை மீட்பதற்காகச் செய்த சாகசமும், அதன் பிறகு அவருக்கு நேர்ந்த கதியுமே இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் சாக்கடை கால்வாய்க்கு மேலே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார். ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படும் ஒரு பந்தை மீட்பதற்காக அவர் தனது கைகளால் சுவரைப் பிடித்தபடி கீழே இறங்குகிறார். பந்து அருகில் வந்ததும், சாமர்த்தியமாகத் தனது கால்களால் அந்தப் பந்தைப் பிடித்து மேலே தூக்கி வெளியே எறிகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by MD SAHIL (@mdsahil656.7)

பந்து பத்திரமாக வெளியே வந்துவிட்டது, தனது இலக்கை எட்டிவிட்டோம் என அவர் நினைத்த அந்த நொடியில், எதிர்பாராத விதமாக அவரது பிடி நழுவுகிறது. நிலைதடுமாறிய அந்தப் பெண் ‘தடாலென’ சாக்கடை கால்வாய்க்குள் விழுகிறார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களைப் (Likes) பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “மிஷன் முடிந்தது, ஆனால் ஆள் காலி” என்றும், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். பலர் சிரிப்பு எமோஜிக்களைப் பகிர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.