தமிழகத்தில் அடுத்த வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக செய்தி ஒன்று தீயாக பரவிய நிலையில் இதற்கு தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.

நான் பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. பதவிக்காக நான் யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது. பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றதும் கிடையாது. என்னுடைய உயிர் மூச்சு என்றால் அது அதிமுக மட்டும் தான். மேலும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால் நான் விலகுவேன் என்று எந்த இடத்திலும் கூறாத நிலையில் திட்டமிட்டே பொய் செய்திகளை பரப்புகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.