ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிலையத்தில், கைக்குழந்தையுடன் எஸ்கலேட்டரில் சென்ற பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழப்பார்த்த நொடியில், அங்கிருந்த காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எஸ்கலேட்டரில் ஏறியபோது சமநிலையை இழந்த அந்தப் பெண் பின்னோக்கி விழத் தொடங்கியதைக் கவனித்த மெட்ரோ காவலர், சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் தாங்கிப் பிடித்தார்.

ஒரு பெரிய அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு தாயையும் சேயையும் மீட்ட அந்தப் போலீஸ்காரரின் வீரதீர செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“>