மத்திய பிரதேச மாநிலத்தில் சூதாட்டத்துக்கு அடிமையான ஒரு கணவன் இறுதியில்  தன் மனைவியை வைத்து சூதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு கணவன் மனைவி வசித்து வரும் நிலையில் கணவன் சூதாடுவதற்கு அடிமையாக இருந்துள்ளார். சம்பவ நாளில் சூதாட பணம் இல்லாததால் தன் மனைவியை அடமானம் வைத்து அவர் விளையாடிய நிலையில் பின்னர் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் சூதாட பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர் தன் மனைவியின் ஆடைகளை கலைந்து இரவு முழுவதும் நிர்வாணப்படுத்தி அடித்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.