மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் ஜெய்பவானி சாலை பகுதியில், ஒரு வயதான பெண் வழிபாட்டுக்காக தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது, பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர், அவர் கழுத்தில் இருந்த தாலி செயினை    பறிக்க முயன்றார். சம்பவம் நடந்து ஓட முயன்ற அந்த நபரை, அந்த வயதான பெண் தைரியமாக எதிர்த்து துரத்திச் சென்று தாக்கியுள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அந்த பெண்மணி, திருடன் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். அருகில் இருந்த மற்ற பெண்களும் உடனடியாக விரைந்து வந்து உதவினர். குழுவாக தாக்குதலுக்கு உள்ளான திருடன், தன்னுடைய பைக்கை விட்டுவிட்டு  ஓடியதும், அவரது பைக் தரையில் விழுந்ததும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தாலி செயின்  மட்டும் இல்லாமல், தனது வாகனத்தையும் இழந்த நிலையில், வெறும் கைகளுடன் திருடன் தப்பிச் சென்றார்.

“>

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் தைரியத்தை சமூக வலைதள பயனர்கள் பாராட்டி வருகிறார்கள். “பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என்ற வாசகங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் நாசிக் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து, அந்த மர்மநபரைப் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.