
தமிழகத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பல இடங்களில் பட்டாசு கடை வெடி விபத்து நடைபெற்ற நிலையில் சில கடைகள் அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளையும் ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் செயல்படும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளை ஊழியர்கள் கவனமுடன் நடத்த வேண்டும் என்று அமைச்சர் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் அரசு அறிவித்திருக்கும் பட்டாசு ஆலைகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயமாக பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனை கடைகள் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்ற தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.