சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் புதூர் பகுதியில் 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வேலைக்கு செல்லும் நிலையில் கடந்த 15 ஆம் தேதியும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்த பெண்ணை கட்டிபிடித்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தார். இதனால் பயந்து போன அப்பெண் கூச்சலிட்டார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்தப் பெண்ணை காப்பாற்றினர். அந்த வாலிபர்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் மதியவேளையில் நடு ரோட்டில் ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணன் (27) என்பவரை கைது செய்து செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.