
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த மாதத்தில் 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் முன்னதாக பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். அதாவது மொத்தம் 4 செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயார் செய்யப்படுகிறது. அதன்படி செலவுகள் மற்றும் வருவாய்களை மதிப்பிடுதல், நிதி பற்றாக்குறை மதிப்பீட்டை உருவாக்குதல், பற்றாக்குறையை குறைதல் மற்றும் பட்ஜெட்டை சமர்ப்பித்து ஒப்புதல் வாங்குதல் ஆகிய 4 செயல்முறைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
மேலும் பட்ஜெட் தயார் செய்யப்படுவதற்கு முன்பாக நிதி ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி செலவு மற்றும் வரவுகளை ஆராய்வதோடு பற்றாக்குறைகளை கணக்கிட்டு அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் பட்ஜெட் தயார் செய்யப்படும். மேலும் முக்கிய துறைகளின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.