புதுவை அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் விதமாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாக அரசு சார்பாக மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியத்தொகை அரசு சார்பில் வழங்கப்படும்.

இதனைப் பெற்று தொழில் புரிய ஆர்வம் உள்ளவர்கள் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் பயிற்சி வழி தொடர்பு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இணையத்தில் விண்ணப்பிக்க www.agri.py.gov.in  என்ற இணையதளத்தை அணுகவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் அரசு அறிவித்துள்ளது.