
காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 குழந்தைகள் உட்பட 86 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர்
காங்கோவின் கிலிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் மிகப் பெரிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. தலைநகர் நோக்கி வந்த போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த 21 குழந்தைகள் உட்பட 86 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்து மீட்பு குழுவினர் நதியில் தத்தளித்த 185 பேரை மீட்டனர். மேலும் மற்ற நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.