
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் பாம்புகள் பற்றிய வீடியோ என்றாலே பயம் வந்துவிடும். அதிலும் குழந்தைகள் மற்றும் பாம்புகள் வீடியோ மிகவும் வைரலாவது வழக்கம். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதாவது சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை கருப்பு நிற நாகப்பாம்புடன் அசால்ட் ஆக விளையாடுகிறது. குழந்தைக்கு அது என்னவென்றே தெரியாத நிலையில் அந்த பாம்பை பிடித்து விளையாடுகிறது.
இந்த பாம்பு சிறுவனை கொத்த முயலும் நிலையில் அந்த சிறுவன் பாம்பை விடாமல் பிடிக்கிறான். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பாம்பிடம் விளையாடும் சிறுவனை தடுக்க முயலாமல் இப்படி சமூக வலைதள புகழுக்காக வீடியோ எடுத்து வெளியிட்டது கண்டனங்களை குவித்து வருகிறது. மேலும் குழந்தைகளை இதுபோன்ற ஆபத்தான செயல்களில் விளையாட விடுவது உயிருக்கே வினையாக முடியலாம் என்பதால் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Baby footage Viral pic.twitter.com/7DcHITeKY6
— Nature Chapter (@NatureChapter) June 5, 2025