ஹைதராபாத் அருகே உள்ள திண்டிகல் பகுதியில், பசிக்காக அழுத இரண்டு மாத ஆண் குழந்தையை அடுப்பில் வைத்து எரித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட குழந்தையின் தாய் மம்தா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ஹைதராபாத் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக வந்து தங்கியிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த மம்தா, குழந்தையின் வாயில் துணியை வைத்து அடைத்து, சமைக்கும் அடுப்பில் வைத்து எரித்துக் கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்ற தாயை குழந்தையை அடுப்பில் வைத்து எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
