புதருக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதைக் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தம் வந்த திசையை நோக்கி மக்கள் சென்றபோது, அங்கு கண்ட காட்சி அனைவரது இதயத்தையும் உலுக்கியது.

மேலும் ஒரு பெண்ணின் சடலத்திற்கு அருகில் அவரது பிஞ்சு குழந்தை அழுதுகொண்டு அமர்ந்திருந்தது. தன் தாய் இறந்துவிட்டாள் என்று தெரியாமல், பசியால் வாடிய அந்த குழந்தை தாயை எழுப்ப முயன்ற விதம் பார்ப்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்தக் கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்து, பெண்ணின் உடலை மீட்டனர். ஒரு தாய் தனது குழந்தையின் எதிர்காலத்தைப் பாதியிலேயே விட்டுச் சென்றதும், அந்தச் சிறுமி திக்கற்ற நிலையில் நின்றதும் சமூக வலைதளங்களில் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.