சாதாரணமாக காட்டுப் பகுதிகளிலோ, உயிரியல் பூங்காக்களிலோ காணப்படும் முதலை, ஒரு மனித குடியிருப்புப் பகுதியில் வெளிச்சத்தில் சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாதுகாப்பாக தங்கள் வழியில் சென்ற பொதுமக்கள், திடீரென சாலையில் நடந்து சென்ற முதலைக்காட்சியைக் கண்டு பீதியடைந்தனர். சிலர் தூரத்தில் நின்று  கைப்பேசிகளில் வீடியோ பதிவு செய்தனர். அதே நேரத்தில், சிலர் முதலையை பிடிக்க முயற்சி செய்த அதிரடியான காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில், முதலை சாலையில் மெதுவாக நடந்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அதை அடக்க முயன்ற சிலர் வாயில் கயிறு வைக்கும் போது முதலை துடித்து எதிர்ப்பு தெரிவித்தது. பரபரப்பான இந்த சூழலில், துணிச்சலான சிலர் முதலையின் வாயில் துணி கட்டி, பின்னர் டேப் மூலம் மூடி, யாருக்கும் தீங்கு விளையாத வகையில் அதனை கட்டுப்படுத்தினர்.

 

 

இந்த முதலை மீட்பு சம்பவம் சமூக ஊடக தளமான ‘X’ இல் @InsaneRealities என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 24 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது 60,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து, தங்கள் பாராட்டுக்களையும் பல கருத்துக்களையும்  பதிவு செய்துள்ளனர்.

ஒரு பயனர், “இது நேரடியாக எடுக்கப்பட்ட திரைப்பட காட்சி போல உள்ளது” எனக் கருத்து தெரிவித்ததுடன், மற்றொருவர், “முதலை ஒருவரைத் தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மேலும் பலரும், முதலையை அச்சமின்றி கட்டுப்படுத்திய வீரர்களை புகழ்ந்து வருகின்றனர்.