நோட்டு புத்தகங்கள் நம் அன்றாட வாழ்வில் பலரும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால், அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நோட்டு புத்தகம் தயாரிக்கும் முழு செயல்முறையையும் படிப்படியாகக் காட்டுகிறது. இதில், காகிதம் தயாரிப்பது, பக்கங்களை ஒழுங்காக அடுக்குவது, பக்கங்களில் எண்கள் அச்சிடுவது, மற்றும் தைப்பது போன்ற பல்வேறு நிலைகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காணொளி பார்ப்பவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது போன்ற காணொளிகள், நாம் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியில் உள்ள உழைப்பையும் கைவினைத்திறனையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.
