இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.   இந்நிலையில் இரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில், “போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். அது தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கும்” எனக்கூறப்பட்டுள்ளது.