
தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் பிரபல யூ-டியூபர் இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல யூ-டியூபர் இர்ஃபான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தார். ஒருசில நாடுகளில் இதற்கு அனுமதி இருந்தாலும் தமிழ்நாட்டில் இதற்கு அனுமதியில்லை. இது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்தியதால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, சர்ச்சையான வீடியோவை அவர் நேற்று நீக்கியிருந்த நிலையில், தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.