தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) அதிரடியான வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாடகர் கிரிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் அரசியல் வருகையைக் கேலி செய்தவர்களுக்கும், விமர்சித்தவர்களுக்கும் தனது பதிவின் மூலம் அவர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பாடகர் கிரிஷ் இன்ஸ்டா பதிவு!
வந்துட்டார் நம் கரிகாலன் 🔥 pic.twitter.com/wxkrpOyakL— priya (@PriyankaSmile01) May 4, 2026
அந்தப் பதிவில், “நேற்று வந்த பையன், அவனுக்கு என்ன அரசியல் தெரியும், அனுபவம் இருக்கா எனப் பேசியவர்கள் இப்போது எங்கே? அணில் கூட்டம் என்று ரசிகர்களைக் கிண்டல் செய்தவர்களுக்கும், சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறிவிட்டு இப்போது மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கும் இது ஒரு பாடம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழக மக்கள் ஒரு அற்புதமான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். நம்ம கரிகாலன் வந்துவிட்டார், இனி தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் ஆரம்பம், இனி பொற்காலம் தான்” என மிகுந்த உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். விஜய்யின் வெற்றியை ஒரு வரலாற்று மாற்றமாகப் பார்க்கும் கிரிஷின் இந்தப் பதிவு, தவெக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
