தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

“செங்கோட்டையன் எனக்கு மிக மிக வேண்டியவர். அவருக்கு என் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. அவர் இன்றைக்கு ஒரு இயக்கத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறார். அந்த இயக்கம் இன்னும் வளரவில்லை. எடுத்தவுடனே நாளைக்கே ஆட்சியிலே வருவோம் என்று சொன்னால், அது எந்த விதத்திலும் நியாயம் என்றுதான் நான் கேட்டேன். அவர் என்னை டெபாசிட் இழக்கச் செய்வதற்கு, நெல்லையில் போட்டியிடப் போகிறாரா? என்பது எனக்குத் தெரியவில்லை,” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.