சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி  வருகிறது. பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து விட்டது. இந்நிலையில் மழை காரணமாக அறுவடை பணி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் அபாய நிலை இருக்கிறது.

அதனால் மழையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக அரசு உரிய ஆய்வாலர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் காப்பீட்டு திட்டத்திற்கு நெற்பயிர்  மகசூல் சோதனை முடிவடைந்து விட்டதால் தற்போது ஏற்பட்ட இழப்பீட்டிற்கு காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. அதனால் நெல் மகசூல் இழப்பிற்கும் பாசிப்பயிறு, கடலை பயிர் மற்றும் உளுந்து பாதிப்பிற்க்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.